Tuesday 29 September 2015

வகை (4) முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதைப் போட்டி – 2015


          புதிய பயணங்கள்

வாழ்வின் முதல்படியில்
நமது பயணங்கள்
புதிய புதிய நாட்களில்
நாளும் பிரவசங்கள் ஆனால்...

மனித மனங்களில்
நாளும் மதத்தின்
மரணங்கள்...

மனிதம் மறந்த
மனங்களே இன்று...

பகட்டான பார்வைகளில்
யதார்த்தங்களையும் கொஞ்சம்
யாசியுங்கள்...

கருவறையைக் கடந்து
கருவிலே கல்லறையாக்கப்பட்ட
கருவிழிகள்...
கருவறையைக் கடந்து
தெருவோரம் முகவரியைத்
தொலைத்த முத்துக்கள்...
எச்சில் இலைக்காக
காத்திருக்கம் வயிறுகள்
நித்தமும்...

முதுமைக்குள் முகங்கள்
மறைத்துக் கொண்ட
மழலை உள்ளங்கள்
அனாதை இல்லங்களில்...

ஆணும் பெண்ணும் மானுட
இனங்கள் இதில்
உயர்வு தாழ்வு எதற்கு...

கருப்பும் வெளுப்பும்
படைப்பின் ரகசியம்
இன்பமும் துன்பமும் ஒன்றே...

இதயங்களில் இரக்கமெனும்
ஊற்றுப் பெருகினால்
தரணி உயர்ந்திடும்...

மனங்களில் மனிதமெனும்
மலர் மலர்ந்தால்
மனித குலமும் வாழ்வும்
அர்த்தமடையும்.



ப.மணிகண்டன்,
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9894489496


  புதிய பயணங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.


1 comment:

  1. விழாவில் வெளியிடப் படவுள்ள பதிவர் கையேட்டிற்கு விவரம் அனுப்பி அந்த விவரத்தையும் தெரிவித்துவிடுங்கள்.

    இந்த விதிகளுக்கு உட்படாத படைப்புகளை ஏற்பதற்கில்லை.

    ReplyDelete